Saturday 3 June 2017








இல்வாழ்வில் ()ணைய—தள வாழ்த்து…!
வள்ளியென்() த()ங்கை ம()தியான மைத்துனர்
பெற்றோராய்ப் பெறும்…பேறு பெற்ற தம்பு;
இவன் இதுவரை அறியாதது வம்பு – தும்பு
இவனை குறிவைத்ததில்லை குற்ற – அம்பு!
மைனர்போல் சுறுசுறுப்பான மிலிடரி மேஜர்…
பண்பாக இவனை வளர்த்த(து) – ஷண்முகனார்.
இவனது விருப்பம் திவ்யமான உணவு கோரி…
அறுசுவையும் படைத்ததோ பாட்டியான சூரி!
அன்னையைப்போல் ஒரு பண்பட்ட பண்டுவர்
பேர் சொல்ல வந்த இளவல் Dr.சந்தோஷ் குமார்.
சரவணன் என்றும் பண்பு தவறா() நெறியாளன்;
விரும்பி ஆனதோ திறமையான பொறியாளன்!
“காம் மே ஓ பார் பார் கர்த்தா ஹை – கமால்”
போட்டி பொறாமை இவன் முன்னே – டமால்!
இவனது பேர் சொல்லும் சென்னை METRO
தேசமெங்கும் திறமை கூட்டும் இவனது SETRO.
நீ பேச்சிலராய் இருந்ததெல்லம் பொதும் ஐயா…
பேசவைக்க வந்துவிட்டாள் திவ்யமகள் – திவ்யா!
ராமன் தேடிய சீதை - இளங்கோ நாடிய தாமரை
தங்க நி(தி)றமாய் வந்துதித்த தெய்வமகள் திவ்யா!
இரண்டாவதாய் பிறந்து வ(ளர்)ந்த பாலாஜி
மும்பைவாலா சரவணனுக்கு ஆனார் சாலாஜி…
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோட…
வாழ்வாங்கு வாழ்த்தியது முன்னொரு காலம்…
நாளும் தோன்றும் செல் டவராய் உயர்ந்து…
உலகெலாம் படரும் இன்டெர்னெட்டாய் வேர்விட்டு
முகநூல் போல் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து
வாட்ஸ்-அப் என்று வாழ்க்கையை எதிர்கொண்டு,
கார்காத்த குலம் உதித்த பிள்ளைகள் நீவிர்
பார்போற்ற குலம் செழிக்க இணைந்தீர் இன்று
வாழ்வாங்கு வாழ்ந்திருங்கள் இந்த வையகத்து…!
ரவிஜி @ மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
..(த்)தியா!

..(த்)தியா!
ஹா இவள் ரதியாவென,
ஆரத்தியால் மிகச் சுற்றியே;
உற்றார் ஆர்ப்பரித்துக் கைதட்ட;
வந்து உதித்தவளிந்த ஆரத்யா!
அன்னை தன்னுயிரால் பாலூட்டியே,
அன்பால் குழைத்து மெருகூட்டியே;
பாட்டிகள் அரவணைப்புக் கூடுகட்டியே;
கடந்து வந்தாள் அகவை ஒன்றே.
'கல்வி'யும் செல்வமும் சீர்தூக்கியே,
சான்றோர் உன்னைப் பாராட்டவே;
பெரும்-கூ(தோ)ட்டம்  சீராட்டவே;
கடந்திடுவாய் நீ நூற்றொன்றே!
விஜி

பாரி’வேந்தன்…!!!
பாரி’வேந்தன்…!!!
முல்லையை தேரில் படரவிட்டார்
அரசகுலத்து வள்ளல் பாரி.
இங்குனை காரில் அமரவைத்தார்
கார்-குலத்து நாங்கூர் பாரி.
(தலீவரு கார் மேலல்லாம் லேசுல
ஒக்கார விடமாட்டாரும்மா..பேத்தி
அம்பூட்டு செ(வெ)ல்லம்! டாங்க்ஸ்
சொல்லிக்கடா கண்ணூ…!!!)
விஜி