Saturday 18 October 2014

ப(க)ட்டுச் சேலை?!


ப()ட்டுச் சேலை?!
சிறகை விரித்துப் பறக்கும்-
‘பருவம்’ மாறும் நிலைக்கென
‘மே(நூ)லாடை நான் அணிய;
உந்தன் ‘பட்டு’ப் பருவ மகள்
ப()ட்டாக அணிந்திடவே
என்னுயிர் தான் பிரித்து
நானணிந்த நூல் திரித்து
நெய்வதுவோ ஒரு சேலை?
ரவிஜி---
(பட உதவி - நன்றி கூகிள்)

10 comments:

  1. தீபாவளி நேரத்தில் பட்டாம்பூச்சியின் புலம்பல் மிகவும் நியாயமாகவே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாத்தியாரே! பட்டுப்பூச்சி 'பட்டு' ஆடைக்காக 'பட்டு'ப்போகுதேன்னு ஒரு ஆதங்கம்தான்! வருகைக்கு நன்றி! அன்புடன் எம்ஜிஆர்

      Delete
  2. நல்ல கவிதை. எத்தனை எத்தனை பூச்சிகளைக் கொன்று தயாரிக்கிறார்கள்.....

    ReplyDelete
  3. ஒரு பட்டுப் புடவையில் எத்தனை பட்டுப் பூச்சிகளின் உயிர் இழைந்தோடியுள்ளது! அதையும் பகட்டாக எத்தனை விலை கொடுத்து வாங்கி அணிகின்றார்கள் மக்கள்! பட்டுப்பூச்சியின் உயிரின் விலையோ? ஒரு உயிரின் விலை துச்சமாகியதோ!?

    அருமையான கவிதை!

    ReplyDelete
  4. தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete