Monday 7 April 2014

பயணமும் மயக்கமும்!

பயணமும் மயக்கமும்!

பால் நிலவுப் பனி இரவில்
நெடிய பயணம் நிமித்தமாய்
என் கிராமத்து நிறுத்ததில்
ஒரு கொடிய காத்திருத்தல்!
தென்றலின் தண் தீண்டலில்
சிலிர்த்தோடும் பச்சை வயல்;
முழு நிலவின் ஒளிவீச்சில்
தென்னங்கீற்றும் பளபளக்கும்!
சாலையோரப் புதரினுள்
பின்னிசையாய் ரீங்கரிக்கும்
குறும்புச் சில் வண்டுகள்;
சலனமற்ற சாலைமேல்
காளைகள் பாரமிழுத்து
குளம்புகளால் தாளமிடும்;
என்னெதிரே நிமிர்ந்திருக்கும்
மின்மினிகள் அரும்பிட்ட
சாலையோரத்து நெடுமரம்.
அருகாமைத் தோப்பினுள்ளே
ஜோடியைத் தெடி அலையும்
கானல் வரிக் குயிலோசை;
சூழ்நிலையின் சுகம் கண்டு
நிலையில்லா குரங்கு மனம்
பயணத்தை கணம் மறக்கும்;
திருப்பத்தில் உரத்தொலிக்கும்
என் பேருந்தின் குழலோசை
மன மயக்கத்தைத் தீர்க்கும்!
ரவிஜி…
(புகைப்படம் : நன்றி கூகிள்)

5 comments:

  1. மயங்கவைத்த பயணப் பகிர்வு அருமை!

    ReplyDelete
  2. அருமையான பயணம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மயங்க வைத்த கவிதை..... சூழல் கண் முன்னே கொண்டு வந்தது உங்கள் வரிகள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  4. கவிதை வரிகளில் காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் அழகு சுவையானது .

    ReplyDelete