Sunday 23 December 2012

குமிழிகள்


குமிழிகள்
கத்தும் கடலோரம்
காற்றை விரும்பி
மணல் மீது அமர்வு.

என் எதிரே-சோப்பு நீரில்
குமிழிகள் ஊதுகிறான்
விளையாட்டுச் சிறுவன்.

பல்வேறு அளவுகளாய் – பல
வண்ண வண்ண குமிழிகள்
மேன் மேலும்…!

காற்றில் மிதந்து
அலைகழிந்து வெவ்வேறு
திசைகளில்…

வெடித்துச் சிதறி
காற்றில் கரைகின்றன
வெவ்வேறு சமயங்களில்.

பூஜ்ய உ(க)ருப் பெற்று
பூஜ்யத்தில் உழன்றிருந்து
பூஜ்யமாகிப் போகிறோம
குமிழிகள் போல்-
மனிதர்கள் நாம்!

எண்ணம் முகத்தறைய
என்னையும் மீறி
முணுமுணுக்கிறேன்…!

‘காற்றில் கரையும்
குமிழிகள் செய்கிறான்…
கு(சு)றும்பன்!’

                ரவிஜி…

 

3 comments:

  1. பூஜ்ய உ(க)ருப் பெற்று
    பூஜ்யத்தில் உழன்றிருந்து
    பூஜ்யமாகிப் போகிறோம
    குமிழிகள் போல்-
    மனிதர்கள் நாம்!//
    யதார்த்த வரிகள்@ பகிர்விற்கு நன்றி!


    ReplyDelete